தென்கொரிய பட விழாவில் ரேடியோ பெட்டிக்கு விருது

Bookmark and Share

தென்கொரிய பட விழாவில் ரேடியோ பெட்டிக்கு விருது

சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றன. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வாங்கி குவித்து வருகின்றன.

குறிப்பாக, ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் வாங்கி குவித்துள்ளன.

இந்த படங்களின் வரிசையில் தற்போது புதுமுக இயக்குனர் ஹரி விஸ்வநாதன் இயக்கியுள்ள ‘ரேடியோ பெட்டி’ என்ற திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. இப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசை வென்றுள்ளது.

தென்கொரிய படவிழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்படம் என்ற பெருமையை ‘ரேடியோ பெட்டி’ பெற்றுள்ளது. இந்த படத்தில் 75 வயதான லட்சுமணன் என்ற நாடக நடிகர், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரேடியோ பெட்டியும், லட்சுமணன் தாத்தாவும்தான் பிரதான கதாபாத்திரங்கள். இவர்களுடன் டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா, நிவாஸ், ஆதித்தன், லிஸ்சி, பேபி மாயா, இந்துமதி, மாஸ்டர் ரோகன், மிட்டாய் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சரவணா நடராஜன் என்பவர் ஒளிப்பதிவை அமைக்க, லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் போர்ட் என்பவர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனரான ஹரி விஸ்வநாத் யாரிடமும் உதவி இயக்குனராகவோ, துணை-இணை இயக்குனராகவே பயிற்சி எடுக்கவே இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions