அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுநாளையொட்டி, அப்துல் கலாமின் சமாதி அமைக்கப்பட்டுள்ள பேய்க்கரும்பில் 7 அடி அப்துல்கலாமின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னையிலும் அப்துல் கலாமின் நினைவுநாளையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நடிகர் ராகவா லாரன்ஸ் தான் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தில் அப்துல் கலாம் நினைவுநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்துல்கலாமின் புகைப்படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து குழந்தைகள் அனைவரும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதியை ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த அறிவு ஜோதி இன்று ராமேஸ்வரத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில், அப்துல் கலாமின் அண்ணனிடம் ஒப்படைக்கப்படுகிறது. 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions