ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், சமூக அக்கறை கொண்டவர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். அவருக்கு நேற்று பிறந்தநாள். தீபாவளியும், அவருடைய பிறந்தநாளும் ஒரே நாளில் வந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும், அவர் இந்த வருட பிறந்தநாளை சில காரணங்களுக்காக கொண்டாடவில்லை.இருப்பினும், தீபாவளியை ஆதவற்ற குழந்தைகளுக்காக இவர் நடத்திவரும் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய பிறந்தநாளும், தீபாவளியும் ஒரேநாளில் வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்திற்காக இந்த தீபாவளியை ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் கொண்டாடினேன்.

ஆனால், என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று கூறியுள்ளார்.ராகவா லாரன்ஸ், அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் மேற்படிப்பு படிக்க முடியாத ஏழை, எளிய மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவி வருகிறார். அதேபோல், தனது அம்மாவுக்கும், அவர் வழிபடும் ராகவேந்திரருக்கும் கோயில் கட்டி வருகிறார். ஊனமுற்ற பலருக்கும் டான்ஸ் கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையும் மேம்பட வழிவகை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions