இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் நடிகர் லாரன்ஸ்!

Bookmark and Share

இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் நடிகர் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார்.

இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்– 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும் போது.....

“ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன்.

நான் தான் சரியாக படிக்கல... படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.

ராகவா லாரன்ஸ் இந்த பள்ளிக்கூட நிதிக்காக முதன் முறையாக நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions