இரண்டு மணி நேரத்தில் நடக்கும் 54321

Bookmark and Share

இரண்டு மணி நேரத்தில் நடக்கும் 54321

செய்தியின் தலைப்பு கொஞ்சம் குழப்பத்தான் செய்யும். இதோ விளக்கம். 54321 என்பது ஒரு படத்தின் டைட்டில். 5 கேரக்டர்கள், 4 விதமான வாழ்க்கை, 3 கொலைகள், இரண்டு மணி நேர சம்பவம், 1 பழிவாங்கல் இவற்றை கொண்டு உருவாகும் படம். இப்போது தலைப்புக்கு பொருள் விளங்கிடுச்சா...

பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரபாகர் இயக்கியுள்ளார், ரம்மி, தாண்டவக்கோனே படங்களில் நடித்த ஆர்வின் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட நடிகை பவித்ரா  ஹீரோயின். நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்த ஷாபிர் வில்லன்.

இவர்கள் தவிர ரோகிணி, ரவிராகவேந்திரா, பசங்க சிவகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.   பாலசுப்பிரமணியத்தின் உதவியாளர் பானு முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்ககிறார். இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.

படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions