லாரன்ஸ்க்கு தந்தையாக மாறிய 'கட்டப்பா'

Bookmark and Share

லாரன்ஸ்க்கு தந்தையாக மாறிய 'கட்டப்பா'

பைரவா படத்தில் தனது தந்தையாக நடிக்கும் வாய்ப்பை சத்யராஜ்க்கு நடிகர் லாரன்ஸ் வழங்கி இருக்கிறாராம். பேய்ப்படங்களின் நாயகன் ராகவா லாரன்ஸ் தற்போது பைரவா, மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான காஞ்சனா 2 சுமார் 100 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனால் ராகவா லாரன்ஸின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது.

இந்நிலையில் லாரன்ஸ் நடித்து வரும் பைரவா படத்தில் அவரது தந்தையாக நடிக்கும் வாய்ப்பை 'கட்டப்பா' புகழ் சத்யராஜ்க்கு லாரன்ஸ் வழங்கி இருக்கிறார். பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் சத்யராஜ் புகழ்பெற்று விட்டார்.

அதனால் தங்களது அடுத்த படங்களில் அவரை ஒப்பந்தம் செய்திட கோலிவுட்டினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பைரவா படத்தில் லாரன்ஸின் தந்தையாக நடிக்க சத்யராஜ் சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

காஞ்சனா படத்தில் சரத்குமாருக்கு அமைந்த கதாபாத்திரம் போன்று இதுவும் மிக வலுவான பாத்திரம் தான் என்று கூறுகின்றனர். மேலும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் தான் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார்.

சொல்லப் போனால் இந்தப் படத்தின் முதுகெலும்பே சத்யராஜ் பாத்திரம் தான் என்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.

சமீபத்தில் வெளியான கெத்து படத்தில் உதயநிதியின் தந்தையாக சத்யராஜ் நடிப்பில் கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions