
ராகவா லாரன்ஸ் அடுத்து எடுக்கும் படத்துக்கு அராத்து என்கிற தலைப்பைப் பதிவு செய்துள்ளாராம்.
அவர் பேய் பிசாசு பட ஸ்பெஷலிஸ்ட் ஆயிற்றே இது என்ன தலைப்பு? பொதுவாக அராத்து என்றால் யாருக்கும் அடங்காதவன், பிடிவாதக்காரன் என்கிற தொனியில்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.
ஆனால் அராத்து என்றால் பேய்க்கதைக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லையே காரணம் தெரியாமல் லாரன்ஸ் வைத்து இருக்கிறாரா என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா?
அராத்து என்றால் என்ன என்று பலரையும் விசாரித்த போது அது கோவையில் பிரபலமாய் பேசப்படும் புழக்கத்திலுள்ள வார்த்தையாம். சரி அராத்து என்றால் என்னவாம்? அராத்து என்றால் அர்த்த ராத்திரியில் ஆந்தை அலறும் நேரத்தில் பிறந்தவன் என்று அர்த்தமாம். எல்லாரும் தூங்கும் நேரத்தில் ஆந்தை விழித்திருக்கும், அலறும், பயமுறுத்தும். அதுபோல எல்லாரும் தூங்கும் நேரத்தில் இவன் விழித்திருப்பான் மற்றவர் எதிர்பாராததை இவன் செய்வான்.
யூகிக்க முடியாததை இவன் செய்வான், பிறர் தீர்மானிக்க முடியாததை இவன் செய்வான்.அவன்தான்அராத்து. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள் பேய்ப்பட தலைப்புக்கு அராத்து என்பது பொருந்தி வரும்.
Post your comment