நான்கு பேய்களுடன் ராகவா லாரன்ஸ் பேயாட்டம்

Bookmark and Share

நான்கு பேய்களுடன் ராகவா லாரன்ஸ் பேயாட்டம்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளிவந்த பேய் மற்றும் திரில்லர் படம் முனி. இப்படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை முனி-2 காஞ்சனா என்ற பெயரில் படமாக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அடுத்த பாகத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு முதலில் ‘முனி-3 கங்கா’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், தற்போது ’காஞ்சனா 2’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ் நான்கு விதமான பேய் கெட்டப்பில் நடிக்கிறாராம். 15, 25, 40, 50 வயது பெண்களின் பேய் பிடித்தவர் போன்று வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

ஏற்கெனவே காஞ்சனா படத்தில் திருநங்கை, முதியவர், மனவளர்ச்சி குன்றிய இளைஞன் ஆகிய மூன்றுவிதமான பேய்கள் பிடித்தவராக ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடித்து வருகிறார். டாப்சி கதநாயாகியாக நடித்து வருகிறார். நித்யா மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.  


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions