லாரன்ஸுக்கு சம்பளம் 10 கோடி

Bookmark and Share

லாரன்ஸுக்கு சம்பளம் 10 கோடி

'காஞ்சனா 2' படத்தின் வெற்றி ஓட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரவிருக்கும்நிலையில், ராகவா லாரன்ஸ்  அடுத்தப்படத்தைத் தொடங்க உள்ளார். 'காஞ்சனா 2' படத்தின் முடிவில் 'காஞ்சனா 3' உருவாகும்வகையில் படத்தின் முடிவை வைத்திருந்ததால்,  ராகவா லாரன்ஸ் அடுத்தப் படமாக 'காஞ்சனா 3' இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.  

அதற்கு முன்னதாக, 'ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா' என்ற படத்தையும் இயக்கி, நடிக்கவிருப்பதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான வேலைகள் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தன.

இந்நிலையில், தற்போது வேறொரு புதிய படத்தை இயக்கி, நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் லாரன்ஸ்.  ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தை வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் தயாரிக்கிறார்.

கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கான மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே இயக்க திட்டமிட்டிருந்த படங்களை தள்ளி வைத்துவிட்டு  அவசர அவசரமாக வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் படத்தை ராகவா லாரன்ஸ் ஒப்புக்கொண்டது ஏன்? அவர்கள் தருவதாக சொன்ன பெரிய சம்பளம்தான் காரணம். இந்தப் படத்தை இயக்கி நடிக்க  லாரன்ஸுக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions