கோவை சரளாவை விடாத ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

கோவை சரளாவை விடாத ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய மூன்று படங்களிலும் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூன்று படங்களிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. குறிப்பாக, குழந்தைகள் இவரது காமெடியை மிகவும் ரசித்தனர்.

தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு கோவை சரளாவை பயன்படுத்தியதற்கான காரணத்தை லாரன்ஸ் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கோவை சரளா ‘சதிலீலாவதி’ படத்தில் கோவை தமிழில் பேசி நடித்திருப்பார். அந்த படத்திலிருந்து அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதன்பிறகு கோவை சரளா நிறைய படங்களில் கோவை தமிழ் பேசி நடிக்கவில்லை.

ஆகவே, நான் இயக்கும் படத்தில் அவருக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு வழங்கி, அவரை கோவை தமிழ் பேசி நடிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதனாலேயே, எனது மூன்று படங்களிலும் அவரை நடிக்க வைத்தேன். இந்த முனி, இனி எத்தனை பாகம் சென்றாலும், அவர் அதில் தொடர்ந்து நடிப்பார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions