முன்பு அஜித், இப்போ விஜய் – ஆதரவு கரம் நீட்டிய லாரன்ஸ்

Bookmark and Share

முன்பு அஜித், இப்போ விஜய் – ஆதரவு கரம் நீட்டிய லாரன்ஸ்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருப்பின்னும் குழுந்தைகள் மற்றும் பெண்கள் ஆதரவுடன் படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளதால் சில பள்ளி நிர்வாகங்களே மாணவர்களை திரையரங்கிற்கு கூட்டிச் சென்று புலி படத்தைப் பார்க்க வைத்துள்ளார்கள்.

இப்படத்தை புகழ்ந்து ரஜினி, ஜீவா, ஜெயம் ரவி, தமன்னா, சமந்தா ஆகியோர் பேசினார்கள். ஆனால், தற்போது வார நாட்களில் படத்தின் வசூல் டல் அடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் சென்னையிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் படிக்கும் மாணவர்களும் புலி படத்தை விரைவில் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறாராம் லாரன்ஸ்.

சமீபத்தில் ‘வேதாளம்’ படத்தலைப்பை அஜித்திற்காக விட்டுக்கொடுத்து உதவினார் லாரன்ஸ். தற்போது ‘புலி’க்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் விஜய்க்கும் உதவ முன்வந்துள்ளார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions