தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ்

Bookmark and Share

தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ்

எந்த ஹீரோவும் செய்யாத, செய்யத் தயங்குகிற காரியத்தை செய்திருக்கும் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரது மனதிலும் உயர்ந்துவிட்டார். 

விளம்பரக்கட்டுப்பாடு என்ற பெயரில் பல சேனல்களின் விளம்பர வருவாயில் கையை வைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இனிமேல் தமிழ்த்திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்தன சேனல்கள்.

சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தான் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. தற்போது அதற்கும் வழியில்லாமல் போனதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இன்னொரு பக்கம், ஓவர்சீஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு ஏரியா உரிமையை வாங்கவும் ஆள் இல்லை. சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் பிசினஸ் இல்லாமல் போனதினால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் தயாரிப்பாளர்கள். 

இப்படியொரு சூழலில்தான் மற்ற ஹீரோக்கள் செய்யத் துணியாத அந்த விஷயத்தை செய்திருக்கிறார் ராகவேந்திரா லாரன்ஸ். வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இரண்டு படங்களை இயக்கி ஹீரோவாகவும் நடிக்கும் லாரன்ஸ், இந்தப்படங்களை ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு அவரே தயாரித்துக் கொடுக்கிறார். 

தற்போது தமிழ்ப்படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் பிசினஸ் இல்லை என்பதை புரிந்து கொண்ட லாரன்ஸ், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் வியாபாரம் ஆகாமல்போனால் எத்தனை கோடி நஷ்டம் வந்தாலும் அதை எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளரின் நஷ்டத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட லாரன்ஸின் பெருந்தன்மை பற்றி ஆச்சரியத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions