இயற்கை விவசாயம் செய்யும் மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

இயற்கை விவசாயம் செய்யும் மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி, நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வளராவிட்டாலும், இவர் செய்யும் பல சமூக சேவைகள் இவரை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கும். அந்தளவுக்கு இவர், நிறைய சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘நாகா’ ஆகிய படங்களின் அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் இவருக்கு கொடுத்த ரூ.1 கோடி அட்வான்ஸ் தொகையை அப்துல் கலாம் பெயரில் தொடங்கப்பட்ட பசுமை திட்டத்திற்கு செலவிடப் போவதாக அறிவித்தார். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப் போவதை அறிந்த ராகவா லாரன்ஸ், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions