போலீஸ் வேடத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா - 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராகவேந்திரா லாரன்ஸ் அடுத்து இயக்கும் படம் என்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

ராகவா லாரன்ஸோ இப்போதைக்கு படம் இயக்கும் எண்ணமில்லை என்கிறாராம். காஞ்சனா - 2 படத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ள அவர் அதற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லை.

கதையை தயார் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் இடையில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்.

என்.டி.ராமராவின் பேரன் நந்தமூரி கல்யாண் ராம் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான படம் - பட்டாஸ். அனில் ரவிபுடி இயக்கிய பட்டாஸ் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருக்கிறார் சௌத்ரி. அந்தக் கதைக்கு ராகவா லாரன்ஸ் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஹீரோவாக புக் பண்ணி இருக்கிறார் சௌத்ரி. சாமி படத்தில் விக்ரம் நடித்தது போன்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions