நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. போராட வேண்டாம், கொண்டாடுவோம்: லாரன்ஸ்

Bookmark and Share

நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. போராட வேண்டாம், கொண்டாடுவோம்: லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என்பதால், நாம் வெற்றியை கொண்டாடுவோம் என்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெரினா போராட்ட களத்தில் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாதது பங்கேற்றதோடு, சொந்த செலவில் உணவு, குடிநீர் சப்ளை செய்தவர் லாரன்ஸ்.இந்நிலையில், மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியுள்ள சூழலில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் லாரன்ஸ் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆளுநரும் இதை தனது உரையில் உறுதி செய்துவிட்டார். ஆனால் நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பது யாருக்குமே புரியவில்லை. நமக்கு நிரந்தர வெற்றி கிடைத்த இந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் போராட வேண்டாம்.

எந்த இடத்தில் 7 நாட்களாக கஷ்டப்பட்டோமோ அதே மெரினாவில் இன்று இரவு நாம் வெற்றியை கொண்டாடுவோம். நானே நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்தார்.


Post your comment





Related News
ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதிஉதவி வழங்கிய லாரன்ஸ்
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
லாரன்ஸ் நற்பனி மன்றம் சார்பாக புகார்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions