மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் நடனம் ஆடும் ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் நடனம் ஆடும் ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ், பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற வழிவகை செய்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது மாற்றுத்திறனாளி மாணவர்களை தனது படங்களிலும் டான்ஸ் ஆட வைத்து அவர்களுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ படத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தெலுங்கு படங்களிலும் தனது மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்.இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் ‘சிவலிங்கா’ படத்தின் அறிமுக பாடலுக்கு மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடப்போவதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது படமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

‘சிவலிங்கா’ படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். சக்தி வாசுதேவன், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்கிறார். கன்னடத்தில் பி.வாசு இயக்கிய ‘சிவலிங்கா’ படமே தமிழிலும் ‘சிவலிங்கா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
தமிழகத்தை விட்டு செல்கிறேன், லாரன்ஸ் உருக்கம்
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு
ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்த தனுஷ் தம்பி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions