ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு

Bookmark and Share

ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் அதிமுகவில் சலசப்பு வெடித்தது. இதையடுத்து அவரே முதல்வராகவும் பதவி ஏற்பேன் என துடித்து வருகிறார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களையும் மிரட்டி ரிசாரட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா, கங்கை அமரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது லாரன்ஸ் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
என்னால் இந்த போதையில்லாமல் இருக்க முடியாது - லாரன்ஸ் பற்றி வெளிவராத தகவல்
ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions