வெரி குட் நண்பா: விஜய்யை பாராட்டிய ரூ.1 கோடி ராகவா லாரன்ஸ் #Jallikattu

Bookmark and Share

வெரி குட் நண்பா: விஜய்யை பாராட்டிய ரூ.1 கோடி ராகவா லாரன்ஸ் #Jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஜய்யை நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள். இல்லை புரட்சி செய்து வருகிறார்கள். அரசியல்வாதிகளின் ஆதரவும் வேண்டாம் திரைத்துறையினரின் ஆதரவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

திரைத்துறையினர் வேண்டுமானால் மெரினா வந்து எங்களுடன் போராடுங்கள் என்கிறார்கள் புரட்சியாளர்கள்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைய தளபதி விஜய் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். பீட்டாவை நாட்டை விட்டே அனுப்பினால் தமிழ்நாடே மகிழ்ச்சி அடையும் என்றார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்ட விஜய்யை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருபவர்களின் உணவு, நீர், மருந்து செலவுக்காக ரூ. 1 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போராடி வருபவர்களுக்கு உணவு, நீர், மருந்து தான் தற்போது முக்கியமாக தேவைப்படுகிறது. அதை வாங்க பணம் தர முன்வந்த ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
தமிழகத்தை விட்டு செல்கிறேன், லாரன்ஸ் உருக்கம்
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு
ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்த தனுஷ் தம்பி
பிப்ரவரி 18ம் தேதி மட்டும் நான் சொல்வதை செய்யுங்களேன், லாரன்ஸ் வேண்டுக்கோள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions