ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்

மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால், எனது இதயத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. இதுபோன்றதொரு வலியை இதுவரை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், இப்போது அதை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதுபோன்ற பிரச்சினைகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்படியான பிரச்சினைகளால் நான் அச்சப்பட்டுவிட மாட்டேன். எது நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் நான் தனியாக தவித்துவந்த காலத்தில் சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தான் நான் சினிமாவில் அடியெடுத்து வைக்க உதவினார்கள்.

இப்போதும்கூட மொட்ட சிவா கெட்ட சிவா வெளியீட்டுக்கு பின்னர் ரஜினிகாந்த் தான் என்னை ஒரு குழந்தைபோல் ஆரத்தழுவி நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் தெரிவித்திருக்கிறார். என்னை அவர் நன்கு அறிவார். நானும் அவரை அறிவேன். அவர் எனது குரு.

எனக்கு நிறைய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கொடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions