என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்

Bookmark and Share

என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்

நிமிர்ந்து நில், அறியான் படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ராகிணி திரிவேதி. தற்போது அவர் 3 கன்னட படங்களில் நடித்து வருகிறார். சிவபிரகாஷ் என்ற தயாரிப்பாளர் இயக்கும் நாட்டிகோலி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த மே 1ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முதல்நாள் படப்பிடிப்புக்கு ராகிணி செல்லவில்லை. இதனால் தனக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சிவபிரகாஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ராகிணியிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சிவபிரகாஷ் என்னை தனது கேர்ள் பிரண்ட் என்று சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

நான் யாருக்கும் கேர்ள் பிரண்டும் கிடையாது, யாருடனும் பார்ட்டிக்கோ, டேட்டிங்கிற்கோ செல்வது கிடையாது. என்னை பற்றி சிவபிரகாஷ் அபாண்டமாக பழிசுமத்தியிருக்கிறார்.

ஒரு பெண்ணை நோக்கி விரல் நீட்டும்போது அவளது குடும்பத்தை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாமா. இது தரம் தாழ்ந்த செயல் என்பதை அவருக்கு புரிய வைப்பதற்காகத்தான் நான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. என்று கூறியிருக்கிறார். இரு தரப்பையும் சமானப்படுத்தும் முயற்சியில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

 


Post your comment





Related News
ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?
நடிகை ராகினி திவேதி மீது ரூ.16 லட்சம் மோசடி புகார்
ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது
உடல்நல குறைவால் வாய்ப்பை இழந்தாரா \'தலைவா\' நாயகி..?
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராகினியுடன் நிகிஷா மோதல்
5 மொழிகளில் வெளியாக உள்ள \'அம்மா\' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions