காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்

Bookmark and Share

காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த 2 நடிகைகளுமே தமிழ் படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகினி திவேதி “நிமிர்ந்து நில்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். சஞ்சனா கல்ராணி “ஒரு காதல் செய்வீர்” என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் டார்லிங் பேய் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். ராகினி திவேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

“காவிரி நமக்கு சொந்தமானது. கர்நாடகாவில் உள்ளவர்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லாத நிலைமை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு நாம் எதற்காக தண்ணீர் கொடுக்க வேண்டும். நமது கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இறங்கி இருக்கிறேன். நீங்களும் வாருங்கள்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுபோல் நடிகை சஞ்சனா கல்ராணியும் காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ராகினி திவேதிக்கும், சஞ்சனா கல்ராணிக்கும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து கருத்துகள் பதிவு செய்துள்ளனர். இரண்டு நடிகைகளையும் தமிழ் பட உலகினர் புறக்கணிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, “இரண்டு நடிகைகளும் காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு சோறு போட்ட தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்கள். விவசாயிகள் கடவுள் போன்றவர்கள். வாழ்வாதாரத்துக்கான உரிமையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதன் மூலம் தேசியத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது” என்றார். 


Post your comment





Related News
ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்
கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?
நடிகை ராகினி திவேதி மீது ரூ.16 லட்சம் மோசடி புகார்
ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது
என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்
உடல்நல குறைவால் வாய்ப்பை இழந்தாரா \'தலைவா\' நாயகி..?
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராகினியுடன் நிகிஷா மோதல்
5 மொழிகளில் வெளியாக உள்ள \'அம்மா\' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions