
ராணாவுடன் இணைத்து கிசு கிசுக்கப்படுபவர் ராகினி திவேதி. கன்னட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துவரும் இவர், தமிழில் ‘நிமிர்ந்து நில்‘ படத்தில் நடித்தார். அரியாண் படத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோக்களுக்கு ரசிகர் சங்கம் இருப்பதுபோல் ஹீரோயின்களுக்கு ரசிகர் சங்கம் என்பது அரிதாகவே இருந்தது. குஷ்பு, திரிஷா என ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே சங்கம் அமைத்திருந்தனர்.
அதேபோல் தனக்கும் ரசிகர்கள் சங்கம் அமைக்கவுள்ளதாக ராகினி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அறிவித்தார். அதன்பிறகு கப்சிப் ஆனார். தற்போது அதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.
இது பற்றி ராகினி கூறும்போது,
‘நீண்ட நாட்களாக ரசிகர் சங்கம் அமைப்பது பற்றி ரசிகர்கள் என்னிடம் அனுமதி கேட்டு வந்தனர். ஓகே சொல்லிவிட்டேன். ‘அகிலா கர்நாடகா ராகினி திவேதி அபிமானி சங்கம்‘ என்ற பெயரில் தற்போது சங்கம் அமைத்திருக்கிறார்கள்.
இது எனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் ஆர்வத்தையும் அதிகமாக தூண்டி இருக்கிறது. கன்னட ரசிகர்கள்போல் தமிழ் பட ரசிகர்கள் சிலரும் என்னிடம் சங்கம் அமைப்பதுபற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு இன்னும் நான் அனுமதி தரவில்லை‘ என்றார்.
Post your comment