‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது

Bookmark and Share

‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது

தமிழில் அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்திருப்பவர் கவர்ச்சி நடிகை ராகினி திவேதி. இவர் நடிக்கும் கன்னட படம் ‘நட்டி கோலி’. ஸ்ரீனிவாஸ் ராஜூ டைரக்டு செய்கிறார். வெங்கட் தயாரிக்கிறார்.

இப்படத்திற்காக ராகினி திவேதி பங்கேற்ற போட்டோ ஷூட் நடந்தது. அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் சிவபிரகாஷ் என்பவர், ‘நான் ராகினி திவேதியின் பாய்பிரண்ட். போட்டோ ஷூட்டை நிறுத்துங்க’ என்றபடி போட்டோகிராபரிடம் தகராறு செய்தார்.

அதைப்பார்த்த நட்டி கோலி பட தயாரிப்பாளர் வெங்கட், சிவபிரகாஷை தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த  சிவபிரகாஷ், வெங்கட்டை அடித்தார். இதையடுத்து போட்டோ ஷூட் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து ராகினி திவேதியை நடிக்க வைத்தால் பிரச்னை வரும். படப்பிடிப்பு தடைபடும் என்று இயக்குனர் எண்ணியதால் அவரை நீக்கிவிட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்ய எண்ணி உள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் கூறும்போது,

‘இப்பட கதையை முதலில் பிரியாமணியிடம்தான் கூறினேன். அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் அவரிடம் கால்ஷீட் இல்லை. தற்போதுள்ள நிலையில் மீண்டும் அவரை அணுகி உள்ளேன்.

ஆனால் இறுதி முடிவு எடுக்கவில்லை’ என்றார். பிரியாமணியும் இயக்குனர் தன்னை தொடர்புகொண்டு கால்ஷீட் கேட்டார் என்றார். இது பற்றி ராகினி கூறும்போது, ‘பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன்’ என்றார். 


Post your comment





Related News
ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?
நடிகை ராகினி திவேதி மீது ரூ.16 லட்சம் மோசடி புகார்
ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை
என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்
உடல்நல குறைவால் வாய்ப்பை இழந்தாரா \'தலைவா\' நாயகி..?
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராகினியுடன் நிகிஷா மோதல்
5 மொழிகளில் வெளியாக உள்ள \'அம்மா\' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions