பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்க முயற்சிக்கும் ரகுமான்!

Bookmark and Share

பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்க முயற்சிக்கும் ரகுமான்!

நிலவே மலரே, அன்புள்ள அப்பா, ஒருவர் வாழும் ஆலயம் என கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய ரகுமான், அதன்பிறகு ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கத் தொடங்கினார்.

அந்தவகையில், அஜீத்தின் பில்லா,  பில்லா-2,  சூர்யா நடித்த சிங்கம்-2 ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தார். இதில் சிங்கம்-2வில் சில வில்லன்களில் ரகுமானும் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹவ் ஓல்டு ஆர் யூ ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு பாசிட்டிவான வேடம் என்றபோதும், அடுத்தபடியாக வில்லனாக ஒரு பெரிய ரவுண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ரகுமான்.

அதனால், சில முன்னணி டைரக்டர்களிடம் நெகட்டிவ் வேடங்கள் இருந்தால் கொடுங்கள் என்று ஓபனாக கேட்கத் தொடங்கியிருக்கிறார். முன்னதாக, தற்போது ஒருபடத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து வரும் அவர், பிரகாஷ்ராஜின் மார்க்கெட் தற்போது வீழ்ந்து கிடப்பதால் இந்த நேரத்தில் அதிரடி வேடங்களில் நடித்து அவரது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று சில அபிமானிகளிடத்தில் கூறி வருபவர்,. எத்தனை கொடூரமான வில்லனாக நடிக்க வேண்டுமென்றாலும் நான் ரெடி. அதற்காக எனது தோற்றத்தை மாற்றி நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions