இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பூரிப்பு செய்தி!

Bookmark and Share

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பூரிப்பு செய்தி!

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.

இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான நான்கு தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

பிரபல இந்தி பின்னணிப் பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளின் தம்பியான பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் பெயரால் இசையுலகில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதினை கடந்த ஆண்டு பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், இன்று சென்னையில் தனது 49-ம் பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறந்தநாள் மகிழ்ச்சியை தனது பேஸ்புக் அபிமானிகளுடன் பகிர்ந்துகொண்ட அவர் அதிர்ஷ்டவசமாக எனக்கு இன்னும் 50 வயதாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை கூறியும் எனக்காக பிரார்த்தித்தும், அன்பு செலுத்தியும் வரும் நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர், நலவிரும்பிகள் அனைவருக்கும் நன்றி!.

கடினமாக உழைத்து, மேலும் அழகான இசையை உருவாக்க நீங்கள் எனக்கு ஊக்கசக்தியாக திகழ்கின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு இன்னும் 50 வயதாகவில்லை.
நம்மை எல்லாம் ஒற்றுமையுடனும், நமது மனங்களை எல்லாம் தூய்மையானதாகவும், இரக்க குணமுள்ளதாகவும் வைத்திருக்க இறைவன் அருள் புரியட்டும்!.

ஒருங்கிணைந்த ஞானம், அன்பு, அக்கறை ஆகியவற்றின் மூலம் இந்த உலகை அழகிய இடமாக உருவாக்குவோம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions