நடிகர் சங்க தேர்தல் : விஷால் அணிக்கே ஆதரவு, நடிகர் ரகுமான்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் : விஷால் அணிக்கே ஆதரவு, நடிகர் ரகுமான்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையிலான மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதையடுத்து, தற்போது இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில்கூட, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரை விஷால் அணியினரை சந்தித்து ஆதரவு கோரினர். மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

சில நடிகர்கள் நேரடியாக தாங்கள் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரகுமானும் நடிகர் சங்க தேர்தலில் தனது ஆதரவு விஷால் அணிக்குத்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரகுமான், செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்குத்தான் என்னுடைய ஆதரவு. அவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறைகள். அவர்களிடம் நிறைய நம்பிக்கையும் கனவுகளும் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பத்தில் நான் மிகுந்த சந்தோஷப்படுகிறேன். 

நிறைய விஷயங்கள் செய்யவேண்டும் என அவர்கள் துடிக்கும்போது, அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். என்னுடைய முழு ஆதரவும் விஷாலுக்கும், விஷால் அணிக்கும்தான் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions