பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?

Bookmark and Share

பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?

நடிகை ராகுல் ப்ரீத் தற்போது தமிழில் பிஸியான நடிகையாகிவிட்டார். தீரன் படம் ஹிட் ஆன பிறகு பல படவாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. தற்போது இரண்டு தமிழ் படங்கள், இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு முக்கிய ரோல் நடிக்க அவரை அணுகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கிரிஷ் இயக்கும் இந்த படத்தில் பாலகிருஷ்ணா என்டிஆராக நடிக்கும் நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அவருக்கு மனைவியாக நடிக்கிறார்.

ராகுல் ப்ரீத் நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் ராகுல் பால்காரி வேடத்தில் இளம் வயது என்டிஆரை காதலிப்பவராக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு படங்களில் நடித்து வரும் ராகுல் இந்த படத்தை ஒப்புக்கொள்வாரா என்பது இன்னும் பெரிய கேள்விகுறியாகவே உள்ளது. இருப்பினும் அவரது ரோல் என்னவாக இருக்கும் என தான் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions