நடிகையை மானபங்கம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு

Bookmark and Share

நடிகையை மானபங்கம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மும்பை ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.

இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை மானபங்கம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண் நண்பர் உடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது ராகுல் சிங் தனது தோழி ஒருவருடன் அங்கு இருந்தார். ராகுல் சிங்கிற்கும், மானபங்கம் செய்யப்பட்ட நடிகையின் ஆண் நண்பருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து உள்ளது.

உணவகத்தில் அந்த நபரை பார்த்ததும் ராகுல்சிங் அவரிடம் சென்று போதையில் தகராறு செய்து இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது அவர், நடிகையை மானபங்கம் செய்து உள்ளார்.

இது தொடர்பாக அம்போலி போலீசார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions