எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி

Bookmark and Share

எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி

பிரபல பாலிவுட் இயக்குனரான அஷுதோஷ் கோவரிக்கர் ‘மொகஞ்ச தாரோ’ படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. 

அப்போது, இவ்விழாவில் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான், ‘மொகஞ்ச தாரோ’ படத்துக்காக இசையமைக்க நீங்கள் (அஷுதோஷ் கோவரிக்கர்) என்னை அணுகியபோது, தலைப்பை வைத்து இது ஏதோ வரலாறுசார்ந்த ஆவணப்படமாக இருக்கும் என்றுதான் நான் கருதினேன்.

ஆனால், அந்தப் படத்தை பற்றிய உங்கள் வர்ணனையின் மூலம் இது வேறு மாதிரியான ‘மொகஞ்ச தாரோ’  என்பதை அறிந்து சிலிர்த்துப் போனேன். இதையடுத்து, இந்தப் படத்துக்கேற்ற எனது (இசையமைப்பு) கற்பனையை பயன்படுத்தி, அதற்கேற்ற களங்களை நோக்கி செல்ல முயற்சி செய்தேன்’ என கூறினார்.

இதே விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்த அஷுதோஷ் கோவரிக்கர், ‘தென்னிந்திய மொழிப் படங்கள், இந்திப் படங்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்களுக்கான படங்கள் என அந்தந்த கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு உங்களால் எப்படி தனித்துவத்துடன் இசை அமைக்க முடிகிறது’ என்று கேட்டார்?

இதற்கு பதிலளித்த ரஹ்மான்(49), ‘காதல், சோகம், கோபம், கனவு போன்ற எல்லா நிகழ்வுகளிலும் நம் அனைவருக்கும் ஒரேமாதிரியான உணர்வுதான் தோன்றும். எனவே, முன்பெல்லாம் உலகளாவிய அளவில் இந்த உணர்வுகளின் கோர்வையை நான் கிரகித்துக் கொண்டு எனது இசையில் சேர்த்து தருவேன்.

இப்போது எனக்கு வயதாகி விட்டதால் இனிமேலும் அப்படி செய்ய முடியாது’ என தெரிவித்தார்.


Post your comment





Related News
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!
சீன மொழியில் டப் ஆகும் ரஜினியின் 2.o!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions