துருவங்கள் பதினாறு படத்தில் போலீஸ் அதிகாரியாக ரகுமான்

Bookmark and Share

துருவங்கள் பதினாறு படத்தில் போலீஸ் அதிகாரியாக ரகுமான்

நடிகர் ரகுமான், தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியது மலையாள உலகில்தான். பின்னர், கோலிவுட்டில் தடம் பதித்து, ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு ‘36 வயதினிலே’ என்ற படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரகுமான், தற்போது மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார். கார்த்திக் நரேன் என்ற 21-வயது இளைஞர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் ரகுமான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் ரகுமான் 50 வயது போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறாராம். இப்படத்திற்கு ‘துருவங்கள் பதினாறு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 

இயக்குனர் கார்த்திக் நரேன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். இவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பெரிய நடிகரை இயக்குவது அவருக்கு தயக்கமாக இருந்தாலும், முதல்நாள் படப்பிடிப்பிலேயே ரகுமான் அனைவரிடமும் எளிமையாக நடந்துகொண்டது, அவருடன் இணைந்து பணியாற்ற மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. 


Post your comment





Related News
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions