ஏ.ஆர்.ரகுமானுக்கு ஃபுகுவோகா விருது அறிவிப்பு!

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஃபுகுவோகா விருது அறிவிப்பு!

ஜப்பான் நாட்டின் கெளரவமிக்கதாக கருதப்படுவது ஃபுகுவோகா விருது ஆசிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய மூன்று பிரிவுகளில் 4 விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்தியா சார்பில் 1990-ம் ஆண்டு சித்தார் இசையமைப்பாளர் ரவி சங்கருக்கு வழங்கப்பட்டது. பரத நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியத்திற்கு 1994-ம் ஆண்டும், வரலாற்று ஆசிரியர் ரோமிலா தாப்பருக்கு 1997-ம் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

கடைசியாக சென்ற ஆண்டும் அகடாமிக் பிரிவில் இந்தியாவின் ராமசந்திர குஹாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2016-ம் ஆண்டிற்கான ஃபுகுவோகா விருது இசையமையாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவின் பாராம்பரிய இசை, மேற்கு நாடுகளின் கிளாசிக் இசை மற்றும் அமெரிக்காவின் கிப்ஆப் இசை ஆகிவற்றை இணைத்து புதியதாக நல்ல இசை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஃபுகுவோகா ஆகிய நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் வரலாற்று பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அம்பேத் ஒக்கோம்போ மற்றும் கலை மற்றும் கலாச்சார பிரிவில் பாகிஸ்தான் யாஸ்மின் லாரி ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions