சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்

Bookmark and Share

சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்

பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படம் ராஜமவுலியின் ‘பாகுபலி’ மற்றும் சங்கரின் ‘2.0’ படங்களுக்கு இணையான அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் இந்த படத்தை இயக்கும் சுந்தர்.சி உள்பட படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
'சங்கமித்ரா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய் தமிழிலும் மகேஷ்பாபு தெலுங்கு பதிப்பிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
படம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா..? ; யார் இந்த கூத்தன்..?
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions