ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!

Bookmark and Share

ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதால் சரத்குமார் அணியும், விஷால் அணியும் வாக்குகளை வாங்க கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. சரத்குமார் அணி மதுரையில் இருக்கும் நாடக நடிகர்களை சந்திப்பதற்காக மூன்றாவது தடவையாக  மதுரை வந்தனர். இதில் சரத்குமார், ராதிகா, ராதாரவி, கே.என்.காளை, ராம்கி, பாத்திமாபாபு, பசி சத்யா ஆகியோர் வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய சரத்குமார் , ''எங்கள் மேல் தொடர்ந்து ஊழல் புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் இதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால், பணம் கைமாறிவிட்டது என்று எஸ்.வி.சேகரும், விஷாலும் ஆதாரமில்லாமல் சொல்லி வருகிறார்கள். அவர்கள் மீது பத்து கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டுள்ளேன். 

ரஜினி, கமல் அவர்களை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு ஜனநாயகப்படி உரிமை உண்டு. இந்த சரத்குமார் நடிகர் சங்கத்துக்கு ஒன்றுமே பண்ணவில்லை என்று சொல்லும்போது மனது வலிக்கிறது.

நாளை தேர்தல் நடந்து முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. என்னை பற்றி அவதூறாக பேசியவர்கள் முகத்தில் என்னால் முழிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுமை காத்துவிட்டென். இனி என்னிடம் பொறுமை இருக்காது. நான் யாரென்பதை காண்பிப்பேன்’’ என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions