சினிமாவுக்கு வருகிறார் டிவி நடிகர் ராஜ்கமல்!

Bookmark and Share

சினிமாவுக்கு வருகிறார் டிவி நடிகர் ராஜ்கமல்!

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ராஜ்கமல். அதோடு சீரியல்களிலும் நடித்து வந்தவர். அதேபோல் பல தொடர்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருப்பவர் லதா ராவ்.

இவர் ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். ஆக, சின்னத்திரை கலைஞர்களான ராஜ்கமல்- லதா ராவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் இருந்து ப்ரமோஷன் பெற்று சினிமாவுக்கு வருகிறார் ராஜ்கமல். கடந்த சில ஆண்டுகளாகவே சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்த அவர் தற்போது சண்டிக்குதிரை என்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை ஜெயா டிவியில் 7 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை இயக்கி வந்த அன்புமதி என்பவர் இயக்குகிறார். கிராமத்து மண்வாசனை கதையில் உருவாகும் இப்படத்தில் ராஜ்கமல் தவிர இன்னொரு ஹீரோ செலக்சனும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் இரண்டு கதாநாயகிகளும் இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions