மீண்டும் லாரன்ஸுடன் இணையும் ராஜ்கிரண்!

Bookmark and Share

மீண்டும் லாரன்ஸுடன் இணையும் ராஜ்கிரண்!

நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் ‘முனி’ படம் மூலம் இயக்குனரானார். 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
இதில் முனியாண்டி என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘காஞ்சனா’, மூன்றாம் பாகமான ‘காஞ்சனா 2’ ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. ஆனால், இந்த இரண்டு படங்களிலும் ராஜ்கிரண் நடிக்கவில்லை.

இந்நிலையில், ‘முனி’ படத்தின் நான்காம் பாகமாக உருவாக இருக்கும் ‘நாகா’ படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண் கூட்டணி உருவாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியான பிறகு ‘நாகா’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions