ஒரு முத்தத்துக்கு 19 டேக் எடுத்த `ராஜா ரங்குஸ்கி' ஹீரோ

Bookmark and Share

ஒரு முத்தத்துக்கு 19 டேக் எடுத்த `ராஜா ரங்குஸ்கி' ஹீரோ

`ஜாக்சன் துரை' படத்திற்கு தரணிதரன் இயக்கி வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'.

இந்தப் படத்தில் 'மெட்ரோ' புகழ் சிரிஷ்  நாயகனாகவும், `சித்து +2', புகழ் சந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ்  இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

குற்றப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட  படப்பிடிப்பு வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், ராஜா ரங்குஸ்கி படம் குறித்து தரணிதரன் கூறியதாவது,

கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் இதே வேகத்தில் முடிக்க  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிரிஷ் முத்தக்காட்சியில் நடிக்க மட்டும் பதட்டப்படுகிறார்.  

படத்தின் ஒரு காட்சியில் சாந்தினியை முத்தமிட வேண்டும். அந்த முத்தக்காட்சிக்காக சிரிஷ் சுமார் 19 டேக் எடுத்ததாக  தரணிதரன் தெரிவித்தார். 19 முறை முத்தமிட்டதை

வேண்டுமென்றே செய்தாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும்  என்றும் தரணிதரன் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.


Post your comment





Related News
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எல்லோரின் பேவரட் பாடகருக்கு படத்தில் பாட வாய்ப்பளித்த யுவன்- புகைப்படம் உள்ளே
பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
மற்றொரு சிறுபட்ஜெட் படத்தையும் கைப்பற்றிய யுவன்
பிரபாஸுக்கு ராஜமௌலி கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி
விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா?
சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்
நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions