மீண்டும் நடிக்கிறார் ராஜு சுந்தரம்

Bookmark and Share

மீண்டும் நடிக்கிறார் ராஜு சுந்தரம்

நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டரின் இளைய மகனும், பிரபுதேவாவின் தம்பியுமான ராஜு சுந்தரம் நடன இயக்குனராக, காமெடி நடிகராக 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஐ லவ் யூ டா உள்பட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது நடிப்பதை விட்டுவிட்டு நடன கலைஞராக மட்டுமே பணியாற்றி வருகிறார். சில பாடல் காட்சிளில் தோன்றுவார்.

தற்போது யானும் தீயவன் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹரியின் உதவியாளர் பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் அஸ்வின் அறிமுகமாகிறார். வர்ஷா ஹீரோயின், ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில் ராஜு சுந்தரம் சைக்காட்டிஸ்ட்டாக நடிக்கிறார். இவர்கள் தவிர விடிவி கணேஷ், பொன்வண்ணன் நடிக்கிறார்கள். தெலுங்கு இசை அமைப்பாளர் அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார், ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions