மலையாள பட இசையமைப்பாளர் ராஜாமணி மரணம்

Bookmark and Share

மலையாள பட இசையமைப்பாளர் ராஜாமணி மரணம்

மலையாள பட உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜாமணி, சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. 

மறைந்த மலையாள இசையமைப்பாளர் ஆர்.ஏ.சிதம்பரநாத்தின் மகன், ராஜாமணி. 1985-ம் ஆண்டில், ‘நுல்லினோவிகதே’ என்ற மலையாள படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

மலையாளத்தில், 70 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருந்தார். இவர் இசையமைத்த ‘ராவண பிரபு’ என்ற மலையாள படத்துக்கு கேரள மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. 

‘நரசிம்மம்,’ ‘ஆறாம் தம்புரான்’ ஆகிய மலையாள படங்களுக்கு பின்னணி இசையமைத்ததன் மூலம் மலையாள பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டார். 

சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனார்கள்.

சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ராஜாமணியின் மகன் அச்சுவும் இசையமைப்பாளர்தான். 

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions