மகாபாரத கதை கோடியில் எடுக்க திட்டம்: ராஜமவுலி

Bookmark and Share

மகாபாரத கதை கோடியில் எடுக்க திட்டம்: ராஜமவுலி

இந்திய சினிமாவை உலகமே திரும்பிபார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. சுமார் ரூ.200 கோடி செலவில் தயாரான ‘பாகுபலி’ உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்து ‘பாகுபலி–2’ பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இது முதல் படத்தை விட அதிக அளவு பேசப்பட வேண்டும் என்பதில் இதை இயக்கும் ராஜமவுலி உறுதியாக இருக்கிறார்.

அதற்கு ஏற்ப படக்குழுவினர் திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். நடிகர், நடிகைகளும் இதற்கு ஏற்ப பயன்படுத்தப்பட இருக்கிறார்கள். மிக பிரமாண்டமாக பாகுபலி–2 உருவாகிறது. ‘பாகுபலி–2’ படத்துக்கு பிறகு மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரை வைத்து 2 பெரிய பட்ஜெட் படங்களை இயக்க ராஜமவுலி திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு தனது கனவு படமான மகாபாரதத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ரூ.950 கோடி செலவில் தயாராக இருப்பதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இப்போது இந்த படம் ரூ.1000 கோடி செலவில் உருவாகப் போவதாகவும், இதற்கு ‘கருடா’ என்று பெயர் வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions