ஷங்கரை நெருங்கினாரா ராஜமௌலி ?

Bookmark and Share

ஷங்கரை நெருங்கினாரா ராஜமௌலி ?

பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்தப் படம் பற்றிய பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் அதிகமிருக்கும்.

பட வெளியீட்டிற்கு முன் ஷங்கருக்கே சவால் விடும் அளவில் ராஜமௌலி படமாக்கியிருக்கிறார் என்றே சிலர் கொஞ்சம் ஓவராகவே விளம்பரப்படுத்தினார்கள்.

ஆனால், ஷங்கர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் படம் செய்து கொண்டிருந்த காலத்தில் தனக்கு கிராபிக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் நான் இருந்தேன் என ராஜமௌலியே உண்மை ஒப்புக்கொண்டவர். அப்படி ஷங்கர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ள ராஜமௌலியை சில மீடியாக்கள் வேண்டுமென்றே உசுப்பேற்றி உசுப்பேற்றி எழுதி வருகின்றன.

பாகுபலி படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தப் படத்தில் உள்ள பிரம்மாண்டம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். வெறும் விஷுவலாக மட்டுமே படத்தைக் காட்டும் முனைப்பில் ராஜமௌலி இருந்திருக்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் மகதீரா படத்தை எப்படி தமிழ்ப் படமான நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் பார்த்து காப்பியடித்திருந்தாரோ, இந்த  பாகுபலி படத்தையும் சில பழைய சரித்திரத் தமிழ்ப் படங்களைப் பார்த்து ஒரு புதுக் கதையாக உருவாக்கியிருக்கிறார்.

ஷங்கரின் படத்தில் பிரம்மாண்டமும் இருக்கும், அந்தப் பிரம்மாண்டம் படத்திற்குத் தேவையான ஒன்றாகவும் இருக்கும்.

பாகுபலி யைப் பொறுத்தவரையில் பிரம்மாண்டத்தைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை என்றுதான் படம் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அந்த விதத்தில் ஷங்கரை மிஞ்சும் அளவிற்கு ராஜமௌலி இந்தப் படத்தை உருவாக்கவில்லை என்ற பேச்சே அதிகமுள்ளது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions