ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் ராஜமௌலி

Bookmark and Share

ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் ராஜமௌலி

‘நான் ஈ’படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் இப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலியிடம் தமிழ் சினிமா நட்சத்திரங்களில் யாரை வைத்து படம் இயக்க விருப்பம் என்று கேட்டதற்கு, ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எந்த இயக்குனரிடமும் இந்த கேள்வியை கேட்டால் முதலில் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசை என்று கூறுவார்கள். அதுபோல் நானும் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்.
அஜித்தை நான் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர், நிறைய பேர் அவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். சூர்யா என்னுடைய நல்ல நண்பர். இவர்கள் மூன்று பேருடனும் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.
எனக்கும் கதைதான் முக்கியம். நல்ல கதை கிடைத்தவுடன் இவர்கள் மூவருடனும் அணுகி கதையை பற்றி கூறுவேன். எல்லாம் சரியாக அமைந்தால் இவர்களுடன் பணிபுரிவேன் என்றார்.


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions