விடுமுறை முடிந்து திரும்பும் ராஜமௌலி

Bookmark and Share

விடுமுறை முடிந்து திரும்பும் ராஜமௌலி

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக  பாகுபலி  என்ற ஒன்றைத் தவிர வேறு எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத இயக்குனர் ராஜமௌலி ஜுலை 10ம் தேதியன்று தன் கனவுப் படைப்பை திரைப்பட ரசிகர்களுக்குக் காண்பித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் சினிமா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பத்து நாட்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகிலும், மீடியாக்களிலும்  பாகுபலி  என்ற ஒன்றையே ஒலி, ஒளிக்க வைத்தார்.

 இரண்டு வருடங்களாக தன் குடும்பத்தினருடனும், மகளுடனும் கூட சரியாகப் பேச முடியாமல், தன் மகளே  பாகுபலி  படத்தை வெறுக்குமளவிற்கு நடந்து விட்டது என்று ராஜமௌலி தெரிவித்திருந்தார்.  

பாகுபலி  படத்தின் பணிச்சுமை காரணமாக இரண்டு வருடங்களாக மகளுடன் கூட சரியாகப் பேச முடியாததால்தான் தன் மகளுக்கு  பாகுபலி  படம் பார்க்கும் வரை அது பிடிக்காமல் இருந்தது.

படம் பார்த்த பின் என்னுடைய கஷ்டமும் அவருக்குப் புரிந்தது என்றார். அதனால், கடந்த சில நாட்களாக தன் குடும்பத்தினருடன் விடுமுறையில் சென்றுவிட்டார். விடுமுறை முடிந்து இப்போது ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி.

“குறுகிய விடுமுறைதான், இருந்தாலும் சிறந்த ஒன்று. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்,” என நேற்று ராஜமௌலி அவருடைய டிவிட்டரில் தன் விடுமுறை பற்றி பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions