பாகுபலி இசை வெளியீட்டை உறுதி செய்த ராஜமௌலி

Bookmark and Share

பாகுபலி இசை வெளியீட்டை உறுதி செய்த ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் புகைப்படங்கள் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படங்கள் பாகுபலி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் பாகுபலியாக நடித்திருக்கும் நாயகன் பிரபாஸின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீடு வரும் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகின்றது.

பாகுபலியாக வெளிவந்திருக்கும் பிரபாஸின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றார். படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions