இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலியா ?

Bookmark and Share

இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலியா ?

பாகுபலி படத்தின் டிரைலர்கள், பாடல்கள் வெளிவந்த பிறகு இந்தியாவின் சிறந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதுவரை அந்த சிறப்புக்குரிய அடையாளத்தை தமிழ்த் திரைப்பட இயக்குனரான ஷங்கர் பெற்றிருந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படம் மகத்தான சாதனை புரிந்து தென்னிந்திய திரையுலகத்தில் வரலாறு படைத்திருந்தது.

ஆனால், தற்போது ரஜினிகாந்த் போன்று உலகப் புகழ் பெற்ற நடிகர்கள் இல்லாமல் தன்னுடைய இயக்கத்தை மட்டுமே நம்பி ராஜமௌலி உருவாக்கியுள்ள பாகுபலி படம் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி, அதற்கு இணையான வியாபாரத்தையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹிந்தியில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிடும் இயக்குனர் கரண் ஜோஹர், “இந்தியாவின் சிறந்த இயக்குனர் ராஜமௌலி. அவருடைய ஒவ்வொரு படங்களையும் பார்த்து ரசித்தவன் நான்.

அவருடைய மிகப் பெரும் ரசிகனாக தற்போது உள்ளேன்,” என்று பாராட்டியுள்ளார். ஹிந்தித் திரையுலகின் வெற்றிகரமான இயக்குனரான கரண் ஜோஹரின் பாராட்டு பாகுபலி படத்தின் மார்க்கெட்டிங் யுக்தி என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions