அனுஷ்கா மீது கோபத்தில் இருக்கும் ராஜமௌலி?

Bookmark and Share

அனுஷ்கா மீது கோபத்தில் இருக்கும் ராஜமௌலி?

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ பெரிய அளவில் வெற்றிவாகை சூடியது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் முதல் பாகத்தில் அனுஷ்கா, அழுக்கு படிந்த முகத்துடன் எதிரியிடம் கட்டுண்டு கிடப்பவராக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் அரசியாக நடிப்பதாக கூறப்பட்டது.

முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகளையும் படமாக்கிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அதில், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடங்கியுள்ளதாம். முதல்பாகத்திலேயே இரண்டாம் பாகத்தில் அவர் எந்தமாதிரியாக நடிக்கப்போகிறார் என்பதையும் காட்டியிருந்தனர். 

இந்நிலையில், ‘பாகுபலி’ முதல் பாகம் வெளிவந்த பிறகு இரண்டாம் பாகத்தின் மீதி படப்பிடிப்பை தொடங்குவதற்கு சில மாதங்கள் தாமதமாகவே, இடையில், அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக 20 கிலோ வரை தனது எடையை கூட்டி நடித்துக் கொடுத்தார்.

அதன்பிறகு சில தினங்களிலேயே ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இதனால், அதில்நடிப்பதற்காக அனுஷ்கா மீண்டும் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி, டயட் இருந்தாலும், அனுஷ்காவால் தனது முந்தைய தோற்றம் இன்னும் வர முடியவில்லையாம். 

அவரால்தான் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு முடிவடைவதற்கு காலதாமதாகிக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அனுஷ்கா மீது ராஜமௌலி மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில், அனுஷ்கா தனது பழைய தோற்றத்துக்கு மாறி பாகுபலி இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி
1000 கோடி கடந்தது பாகுபலி2! ஆனால் ராஜமௌலி மீது செம கடுப்பில் இருக்கும் நடிகை..
பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?
கபாலி, தெறி, தங்கல், சுல்தான் என அனைத்து சாதனைகளும் முறியடிப்பு- உலக அளவில் சாதனை பாகுபலி-2
பாகுபலி 2 டிரைலர் எப்போது- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
‘பாகுபலி-2 பாகத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழுவினர்!
பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் ? ரகசியத்தை உடைத்த இயக்குனர் ராஜமௌலி
பாகுபலி இயக்குனருடன் இணையும் ஹிரித்திக் ரோஷன்! March 11, 2016 8:59 pm / by kctamil
பாகுபலி 3ம் பாகம் வருமா? – ராஜமௌலி விளக்கம்
பாகுபலி 2ம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை: ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions