ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்

Bookmark and Share

ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி அதன்பிறகு ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்த பட கதையை தயார் செய்து வருகிறார். RRR என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜான்வி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்துள்ள தடக் படம் நல்ல வசூல் ஈட்டிவருகிறது.

அது விரைவில் 50 கோடி வசூலை தொடவுள்ள நிலையில் படக்குழு வெற்றியை கொண்டாடிவருகிறது. ஜான்வி ராஜமௌலியின் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions