ராஜமௌலியின் முதல் படம் ஸ்டூடண்ட் நெ.1 தொடங்கி அனேகமாக அவரின் அனைத்துப் படங்களும் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளன. ரீமேக் செய்யப்பட்ட முதல் படம் விக்ரமார்க்குடு. ரவுடி ரத்தோர் என்ற பெயரில் பிரபுதேவா இயக்கிய அப்படம் 100 கோடி தாண்டியதை அனைவரும் அறிவர். ராஜமௌலியின் இன்னொரு படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்குகிறார். அதனால்தான் தொடர் ஹிட் என்று ராஜமௌலி பற்றி கமெண்ட் எழுந்த போது ராஜமௌலி தனது ஏழாவது படமான மஹாதீராவை முடித்திருந்தார். படம் பம்பர்ஹிட். அடுத்து என்ன என்று கேள்வி எழுந்த போது தெலுங்கின் காமெடி நடிகர் சுனிலை ஹீரோவாக்கி மரியாதை ராமண்ணா என்ற நகைச்சுவைப் படத்தை இயக்கினார். முன்னணி ஹீரோக்களால்தான் மௌலிக்கு வெற்றி என்ற கமெண்ட்டை இந்தப் படம் தகர்த்தது. முந்தையப் படங்களைப் போல இதுவும் சூப்பர்ஹிட்.
மரியாதை ராமண்ணாவை இந்தியில் சன் ஆஃப் சர்தார் என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படம் வெற்றி பெற்றால் ராஜமௌலியின் பிற படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
Post your comment


