ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு

Bookmark and Share

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு

டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு விரைவில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். தற்போது கோரட்டலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு இப்படத்தை முடித்த கையோடு ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் பிரம்மோச்சவம் படத்தில் நடிக்கிறார்.

அதேசமயம் பிரம்மோச்சவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்தையும் சேர்த்து நடித்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாரம். இதற்காக ஆரம்பத்தில் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாசை கதையை தயார் செய்ய சொல்லியிருந்தார் மகேஷ் பாபு, ஆனால் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறிக் கொண்டிருந்த மகேஷ் பாபுவுக்கு இன்ப அதிர்ச்சியாக ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஒப்புக் கொண்டாராம்.

இதனால் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாசை காற்றில் பறக்கவிட்டு ராஜமௌலியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ் பாபு. தற்போது இயக்குநர் ராஜமௌலி அவரின் கனவு படமான பாகுபலி படத்தில் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருப்பதால், பாகுபலியை முடித்த கையோடு மகேஷ் பாபுவுக்கான கதை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions