டிஜிட்டலில் வெளியாகும் சிவாஜி நடித்த ராஜபார்ட் ரங்கதுரை!

Bookmark and Share

டிஜிட்டலில் வெளியாகும் சிவாஜி நடித்த ராஜபார்ட் ரங்கதுரை!

நவீன தொழில் நுட்பத்துடன் அபி சினி ஆர்ட்ஸ் ஸ்ரீ பூஜா வழங்க தமிழ்நாடு முழுவதும் பாலகிருஷ்ணா வெளியிடுகிறார். தீபாவளிக்கு வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை ஒரு நாடக நடிகர் சொந்தமாக நாடகக்குழு வைத்துக் கொண்டு நாடகங்கள் நடத்திக் கொண்டிருப்பவர் அவருக்கு ஒரு தம்பி (ஸ்ரீகாந்த்) ஒரு தங்கை (ஜெயா) தம்பியை வெளியூரில் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்.இவரது இவரது தங்கையை திருமணம் செய்துகொள்ள முன்வரும் மாப்பிள்ளையும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வரதட்சணையாக ரூ.10,000/& கேட்கிறார்கள்.

இதற்கிடையில் ரங்கதுரையின் நாடகம் எந்த ஊரில் நடந்தாலும் ஒடி வந்து பார்க்கும் அலமேலு (உஷாநந்தினி) ஒருநாள் ரங்கதுரையுடன் சேர்ந்து அல்லி அர்ஜீனா நாடகத்தில் நடிக்கிறார்.

ரங்கதுரை மீது அலமேலுக்கு காதல் ஏற்பட்டு விடுகிறது. தனது தங்கையை திருமணம் செய்துக் கொள்ள வவரதட்சணையாக ரூ.10,000/-& கேட்பவர்களுக்கு கொடுப்பதற்காக அலமேலுவின் தந்தை(பெரியதொழிலதிபர் எம்.என்.நம்பியார்) யிடம் ரூ.10,000/-& கேட்கிறார் ரங்கதுரை. தனது தம்பிக்கே அவரது மகள் அலமேலுவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார்.

ஆனால் ரங்கதுரையின் தம்பி தனது குடும்பம் திவான் பகது£ர் குடும்பம் என்று அண்ணன் பெரிய கோடீஸ்வரன் என்று பொய்சொல்லி தன்னுடன் படித்த குமாரி பத்மினி பெண்ணையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் ரங்கதுரை அலமேலுவின் தந்தைக்கு பதில் சொல்ல முடியாமலும், பணத்தை திருப்பி தரமுடியாமலும் தவிக்கிறார். அலமேலு ரங்கதுரை மீது கொண்ட காதலால் வீட்டைவிட்டு ஒடிவந்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் அலமேலுவின் தந்தையின் பெயரில் அவரது தொழில் பார்ட்னர் (எஸ்.வி.ராமதாஸ்) ரங்கதுரைக்கும் அவரது நாடக குழுவுக்கும் தொந்தரவு கொடுக்கிறார். நாடகக் கொட்டைக்கு தீ வைக்கிறார்கள். இதை எல்லாவற்றையும் மீறி தேசிய உணர்வு கொண்ட, நாடகங்களை நடத்தி மேலும் நல்ல நிலைக்கு உயருகிறார் ரங்கதுரை.

அவர் நாடகத்தில் நந்தனார், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகத்வத்சிங், திவான் பகதுர், கிறிஸ்துமஸ்தாத்தா, திருப்பூர் குமரன் என்று பல வேடங்கள் ஏற்று நடித்து மக்களை கவருகிறார்.

இறுதியில் அவர் நடத்தும் கொடிகாத்த திருப்பூர் குமரன் நாடகம் நடக்கும் போது அவரை சுட்டு கொல்லுவதற்கு ஏற்பாடு செய்கிறார் எஸ்.வி.ராமதாஸ் கூட்டத்தினர்.

இவையாறிந்தவர்கள் ரங்கதுரையை நாடகத்தில் நடிக்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆனால் ரங்கதுரை எதற்காகவும், யாருக்காகவும் அஞ்சாமல் திருப்பூர் குமரன் நாடகம் நடத்தி கொடியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துபோகிறார் ராஜபார்ட் ரங்கதுரை அவர் மீது தேசிய கொடி போர்த்தப்படுகிறது.

நட்சத்திரங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, டி.கே.பகவதி, எஸ்.வி.ராமதாஸ், உஷாநந்தினி, மனோரமா, சுருளிராஜன், ஸ்ரீகாந்த், குமாரிபத்மினி, சசிக்குமார், ஜெயா, மாஸ்டர் பிரேம்குமார், செல்வி ஸ்ரீதேவி, சாமிக்கண்ணு, செந்தாமரை, சி.கே.சரஸ்வதி மற்றும் பலர் நடத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு & பி.என். சுந்தரம், எடிட்டிங் & ஆர். தேவராஜன், கலை & பி.நாகராஜன், மக்கள் தொடர்பு & கிளாமர் கிருஷ்ணமூர்த்தி, கதை, வசனம் & பாலமுருகன், பாடல்கள் & கவியரசர் கண்ணதாசன், இசை & எம். எஸ். விஸ்வநாதன், தயாரிப்பு வி.சி. குகநாதன், டைரக்ஷன் & பி.மாதவன்.

இப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் ‘மதனமாளிகையில்’, ‘அம்மம்மா தம்பி என்று’, ‘பாரதமே என்னருமை பாரதமே’, ‘ஜின் ஜினுக்காம் சின்னக்கிளி’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions