குணச்சித்திர நடிகராக மாற தயாராகும் டாக்டர் ராஜசேகர்..!

Bookmark and Share

குணச்சித்திர நடிகராக மாற தயாராகும் டாக்டர் ராஜசேகர்..!

இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும், ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் கொஞ்ச வருடங்கள் முன்புவரை தமிழில் விஜயகாந்திற்கு தரப்பட்டிருந்தது, என்றால்  தெலுங்கில் அந்த வேலையை கவனித்துக்கொண்டவர் 'இது தாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர்.

கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்ததோடு மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கையும் ஏற்படுத்தின. ஆனால் கடந்த ஐந்து வருடமாக இவர் நடித்த படங்கள்.. ஸாரி.. படம்  எத்தனை தெரியுமா..? ஒன்றே ஒன்றுதான்... ஹீரோவாக நடிப்பது இனி வேலைக்காகாது என்பதால், கடைசியில், முன்னாள் ஆக்சன் ஹீரோக்கள் எல்லோரும் துண்டுபோடும், கேரக்டர் ரோல் ஏரியாவில் இடம்பிடிக்க ராஜசேகரும் மனதளவில் தயாராகி வருகிறார்.

தற்போது இவர் எதிர்பார்ப்பது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கதையின் நாயகனாக, இளம்பெண்ணுக்கு தந்தையாக இவர் நடித்துள்ள 'பட்டப்பகலு' படத்தின் ரிலீசைத்தான்.

ஒரு ஹிட்டாவது கொடுத்து, தான் ஒரு சூப்பர் ஹீரோதான் என நிரூபித்த பின்னரே குணச்சித்திர அரிதாரம் பூசுவாராம்.. அதுகூட ஏதோ ஏனோதானோ என்கிற ரோலாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் தான் சம்மதிப்பாராம். 


Post your comment





Related News
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பிரபல நடிகருக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க நினைத்த அவரது தாய்- யார் அவர் தெரியுமா
கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினரின் ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்!
காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை
அனுஷ்காவுக்கு சிலை வைக்கிறார் ராஜசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions